சுவிஸ் Burgdorf ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கீர்த்திக் இரவீந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை இழந்தோம் இவ்வுலகை இழந்தோம்
நடை பிணங்களாய் நாளும் அலைகின்றோம்
நீ வாழ்ந்து மகிழ்ந்திட இரண்டாயிரத்து பதினேழில் நீ விரும்பிய
பொண்ணை மணமுடித்தாய், மணவாழ்வில் புகுந்து இரண்டாயிரத்தி பதினெட்டில் ஆரித், ஆரிவ் என்ற இரட்டை செல்வங்களுக்கு
அன்புத் தந்தையாகி எங்களை அப்பம்மா, அப்பப்பா,
அத்தை, மாமா என்ற உறவினை கொடுத்தாய்!
அப்பா கடமை செய்தால் நாளும் வாடுவார் என்று உன்னை
பெற்ற அம்மாவை கடமை செய்ய வைத்தாய் என் செல்லமே கீர்த்தி,
எதற்கும் எனக்கு என் அக்கா இருக்கின்றா என்று சொல்லிக் கொள்ளும் நீ எங்களை உன் அக்கா அத்தானிடம் விட்டுவிட்டு எங்கே சென்றாய் எங்கள் அன்பு மகனே கீர்த்தி
உன்னைப் பெற்றவர் மனது பேதலிக்கின்றது ஐயா!!
உறக்கத்தில் வருகின்றாய், உன் சிரிப்பால் எம்மை வாட்டுகின்றாய், உன் பிள்ளைகளுடன் விளையாடுகின்றாய்
எங்களிடம் அழைத்து வருகின்றாய், நர்த் என்கின்றாய், யத்தி என்கின்றாய், அப்பா என்கிறாய், அம்மாவை கூப்பிடுகின்றாய், உறவுகளை அழைக்கின்றாய், நண்பர்களை
நாடுகின்றாய், பல இருந்தும் நீ எம்முடன் இல்லையே!
பகலிருந்தும் ஒளி இல்லை, சூரியன் பவனி வந்தாலும்
ஓராண்டாய் இருளில் உழல்கின்றோம்
உன் நினைவை மறவோம், நாம் இறக்கும் வரை
உன் இரட்டை செல்வங்கள் நற் பெயரோடு வாழ, வளர,
நீ அங்கிருந்து வழி நடத்தி மகிழ வேண்டும்
உன் பிரிவால் வாடும் உன்
அப்பா, அம்மா, அக்கா, அத்தான்,
உற்றார், உறவினர்கள் நண்பர்கள்
மறவோம் மறவோம் மறவோம்