 
                     
        சுவிஸ் Burgdorf ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கீர்த்திக் இரவீந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
கறைபடியா தூயவாழ்வில்
சிட்டாகச் சிறகடித்து இன்பமுடன்
வாழ்ந்த அன்பு மகனே விது!
உன் மென்விரல்கள் தொட்ட பொருட்கள்
நீயின்றி மெளனித்துப் போனதடா!
உன் அழகு ஆடையெல்லாம் மடிப்போடு
மடிந்து உன்னைத் தேடுதடா கீர்த்திக்!
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய்...
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும் மகனே
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது உன் ஆத்மா
சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் !!   
 
                     
                         
                         
                         
                         
                             
                    