
யாழ். மூளாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரேசு விக்கினேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:23/02/2023.
ஆண்டு ஆயிரம் கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்த எமது அன்புத்
தந்தையே!
அழகிய உங்கள் சிரிப்பெங்கே
இனிமையான அறிவுரையும், முத்து போன்ற
சிறந்த பேச்சுமெங்கே
காணத்துடிக்கிறது
எம்மனம்
வாருங்களே அப்பா!
உழைப்பை உரமாக்கி
பாசமாய்
பணிவிடைகள் பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே!
வாசம் குன்றா வாழ்வு தந்து
எமது வளர்ச்சிக்கு வழி காட்டிய
தந்தையே!
உங்களைப்போல்
இந்த உலகில் யார்
இருக்க முடியும் அப்பா!
உங்களின் பாசத்திற்கு
அளவேயில்லை அப்பா!
எம் கவலைகளைச் சொல்வதற்கு
வார்த்தைகளே இல்லை!
அப்பா
அப்பா என்று கூப்பிட ஏங்கிநிற்குது
எங்கள் மனம்!
வாருங்கள் அப்பா!
எங்களை பாருங்கள் அப்பா
எங்களது எல்லா செயலுக்கும்
வழிகாட்டுங்கள் அப்பா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்பான மனிதநேயமிக்க மனிதர். எப்போதும் சிரித்த முகமும் எல்லாம் அவன் செயல் என்ற சொல்லோடும் வாழ்ந்த ஐயா அவர்களின் ஆத்மா மூளாய் பிள்ளையார் மற்றும் நுணாவிற்குளம் அம்மன் அருளோடு சாந்தியடைய பிரார்த்திகிறோம்