Clicky

11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கதிரவேலு சுப்பிரமணியம்
பதுளை முன்னாள் வர்த்தகர்
இறப்பு - 25 NOV 2010
அமரர் கதிரவேலு சுப்பிரமணியம் 2010 காரைநகர் வாரிவளவு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், கோவளத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை வெவர்செட் பிளேஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து..
இன்றுடன் 11 ஆண்டு முடிந்தாலும்!
எமது குடும்பக்கோவிலின் குலவிளக்காய்!
எங்கள் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாய்!
உற்றவர்க்கும், மற்றவர்க்கும் உறுதுணையாய்!

அன்புக்கும், பண்புக்கும் பொக்கிஷமாய்!
அன்பு நெஞ்சங்களில் அகலா இடம்பிடித்து!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து!
எம்மையும் வாழவைத்து!

வானுறையும் எமது தெய்வத்தின்
இனிய நினைவுகளை எங்களின்
உதிரங்களில் சுமந்த வண்ணம்
இம் மலரை உங்கள் பாதக்கமலங்களில்
அர்ப்பணிக்கின்றோம்!

இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்