யாழ். சாவகசேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவன் அரியரட்னம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-04-2023
ஈராண்டு கடந்த பின் உம் நினைவு நாடி
ஈர விழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் நாமும் வாழ்கின்றோம்..
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய்...
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்!
கண்மூடி விழிப்பதற்குள் கணப் பொழுதினில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ!
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும் சகோதரா
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது.
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்....
மீளாத்துயரில் தவிக்கும் அப்பா, அம்மா,
சகோதரிகள்