Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 SEP 1938
இறப்பு 25 JAN 2018
அமரர் காசிப்பிள்ளை பாலசிங்கம்
மாங்குளம் அரசினர் வைத்தியசாலையில் பணிபுரிந்து இளைப்பாறியவர்
வயது 79
அமரர் காசிப்பிள்ளை பாலசிங்கம் 1938 - 2018 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, மாங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.


அப்பா! நீங்கள் வெய்யிலில் காய்ந்து
எமக்கு நிழல் தந்தீர்கள் நீங்கள்
மழையில் மகிழ்ந்து நனைந்து
எமக்கு குடையாகி போனீர்கள்...

நாங்கள் ஒரு பூவைக்கேட்டதற்காய்
ஒரு பூஞ்சோலையை
சொந்தமாக்கி சென்றீர்கள்...

நாங்கள் ஒரு வண்ணத்துப்பூச்சியை
வரவழைக்க கேட்டபோது...
ஆச்சரிய சிறகுகளை
எங்களிற்கு அணிவித்தீர்கள்...

நிலாவைக் காட்டச்சொல்லி
அடம்பிடித்து அழுகையிடையே
"இரவு வரை பொறு!" என
பொறுமை கற்ப்பித்தீர்கள்.

மூன்றெழுத்தில் ஒரு அறக்கவிதை
எழுத உட்கார்ந்தால்
அது........
அப்பா என்றே முடிகிறது!! 

நீங்கள் இறைவனடி சேர்ந்து
ஐந்தாண்டு கடந்து விட்டாலும் நீங்கள்
எப்பொழுதும் எம்முன் நிற்கின்றீர்கள்!

தகவல்: குடும்பத்தினர்