1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கருணாகரன் தயாளசாமி
வயது 63
Tribute
43
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, பிரான்ஸ், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கருணாகரன் தயாளசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று ஓடி
மறைந்ததப்பா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்த
நீர் காயவில்லை
எம்முயிரான எங்களப்பாவே
உன்னோடு மட்டுமல்ல
உன் நினைவோடும் வாழக்கற்றுத்தந்து
விட்டு
நீ சென்றுவிட்டாய்
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய் போகின்றோம்
ஐயனே
உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல்
தவிக்கின்றோம்
விழித்து நிற்கின்றோம்
விடை தெரியாமல் தானே
பாதி வழியில் பாசங்களை
அறித்தெறிந்து
தூர
நீங்கள் சென்றதேனோ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்