5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி துளசியம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமைத் தாங்கிய
அருமை அம்மாவே இன்னும்
ஆறவில்லை நெஞ்சில் பட்ட
வலி தேரேற்றி வடம் பிடிக்க
எங்கள் தெய்வமே நாம்
நினைக்க காலன் இட்ட கட்டளையில்
காற்றில் கலந்து போனீர்களே!
ஆண்டு ஐந்து நொந்து
நொந்துதான் கரைய எங்கள்
கண்ணோர விழி நீரும் இன்னும்
காயாமல் போகின்றதே நீங்கள்
இல்லாமல் அரண்மனையாய்
இருந்தாலும் அநாதையாய்
தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும்
தாயே உந்தன் ஆசிர்வாதத்திற்கு
ஈடாகுமா? உங்கள் ஆத்மா
சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்