8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கண்ணையா கனகலிங்கம்
வயது 62
அமரர் கண்ணையா கனகலிங்கம்
1953 -
2015
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார், கண்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கண்ணையா கனகலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன
மூழ்குமா உந்தன் நினைவுகள்
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
எங்கள் அன்புத் தெய்வமே!
எம் குலவிளக்கு ஒளி விட்டுப்
பிரகாசிக்கும் என நாமிருக்க
ஒளி இழந்து போனதேனோ...?
எங்கள் கனவுகளிலாவது ஒரு தரம்
வந்துவிட்டு சென்று விடுங்கள்
அப்பாவே...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டி நிற்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்