Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 JUN 1953
இறப்பு 03 JUL 2015
அமரர் கண்ணையா கனகலிங்கம் 1953 - 2015 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார், கண்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கண்ணையா கனகலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.   

எங்கள் குடும்பத்தின் அகல் விளக்கே
எங்கள் குடும்பம் என்னும் கோட்டையில்
காவலனாய் வாழ்ந்த எம் அருமை தந்தையே
ஆண்டு பத்து பறந்தோடிய போதும்
எம் துயரம் எம்மைவிட்டு அகலவில்லை!

விழிமூடி எம்மை வழிகாட்டும் எங்கள்
ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ
எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ!

துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே
தள்ளி நின்று எள்ளி நகையாடும்
உலகில் துளி கூட துவழாமல் எம்மை
தூக்கி விட்ட தந்தையே!

நாம் நெடுந்தூரம் விட்டு விட்டோம்
எங்கள் இதயமதில் உம் பாச தீபம்
இறுதி வரை ஒளி வீசிக் கொண்டே இருக்கும்

உம் ஆன்ம சாந்திக்காய் தினமும்
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்!!!!  

தகவல்: குடும்பத்தினர்