3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா வேலுப்பிள்ளை
ஓய்வுபெற்ற C.T.B DEPOT INSPECTOR
வயது 82
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி:13/12/2025
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா வேலுப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே
எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்
உங்களை ஒரு போதும்
மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன் திருவடியில்
சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்