Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 24 MAR 1940
விண்ணில் 17 NOV 2022
அமரர் கந்தையா வேலுப்பிள்ளை
ஓய்வுபெற்ற C.T.B DEPOT INSPECTOR
வயது 82
அமரர் கந்தையா வேலுப்பிள்ளை 1940 - 2022 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா வேலுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:06/12/2023.

அன்பிற்கும் பண்பிற்கும் உருவம் நீங்களப்பா
எங்களை விட்டு எங்குதான் சென்றீர்களோ
 நீங்கள் உத்தியோகம் செல்ல
 எப்ப வருவீர்கள் என்று காத்திருப்போம் அப்பா
இப்போதும் அதுபோல ஏங்கி தவிக்கின்றோம்
அப்பா திரும்ப வரமாட்டீர்களா என்று

ஆண்டு ஒன்று ஆகிவிட்டதப்பா
உங்கள் அன்பு முகம் பாராமல்
நாங்கள் கலங்கித் தவிக்கின்றோம்!

ஆலவிருட்சம் போல் கிளைகளைப் பரப்பி
எங்களை எல்லாம் தாங்கி நின்றவரே!

இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம்
நாம் வாழும் காலம் வரை
உங்கள் நினைவுகளும் எங்கள்
உள்ளத்தில் வற்றாத
 ஊற்றாகப் பொங்கிப் பெருகும்!

உங்கள் வாழ்வின் சிறப்புகளை
எங்கள் மனதில் நிலை நிறுத்தி
உலகம் உங்களைப் போற்றும்படியாக
நாங்கள் மண்ணில் வாழ்வோம்!

உங்கள் ஆத்ம சாந்திக்காய்
உளமுருகி இறைவனிடம் வேண்டுகிறோம்..!

தகவல்: குடும்பத்தினர்