Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 24 MAR 1940
விண்ணில் 17 NOV 2022
அமரர் கந்தையா வேலுப்பிள்ளை
ஓய்வுபெற்ற C.T.B DEPOT INSPECTOR
வயது 82
அமரர் கந்தையா வேலுப்பிள்ளை 1940 - 2022 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா வேலுப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 24-11-2024

அன்பான குடும்பத்தின் குல விளக்கே!
உழைப்பை உரமாக்கி
பாசமாய் பணிவிடைகள் பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே

இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!

உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!

ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும், உங்களது பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!

மண்ணுலகை விட்டுச் சென்றாலும்
விண்ணுலகில் உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
பிராத்தி்க்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்