அப்பா, உங்கள் மகன், எங்கள் தம்பி மாலதன் (கலையரசன்) அவருடன் இப்போது நீங்களும் இறைவனடி சேர்ந்துவிட்டீர்கள். உங்கள் இருவரும் இப்போது ஒன்றாக இறைவனின் அருளில் இணைந்திருக்கிறீர்கள் என்ற சிந்தனை எங்கள் துயரத்திற்குள் ஒரு அமைதியான ஆறுதலாக உள்ளது. ஊரிலும் சரி, புலம்பெயர்ந்த தேசங்களிலும் சரி, எங்கு இருந்தாலும் அன்புடன் அணுகி, ஆதரவாய் நின்று, மனிதநேயத்துடன் பழகியவர் நீங்கள். தட்டாங்குளம் பிள்ளையாரின் திருப்பணியில் மட்டும் அல்ல, ஏனைய பங்குகளிலும், சமூகச் சேவைகளிலும் நீங்கள் காட்டிய உள்ளார்ந்த ஈடுபாடும், அதில் நீங்கள் செய்த கணிசமான பங்களிப்பும் எங்கள் நினைவுகளில் என்றும் பொறிக்கப்பட்டவை. சிரிந்த முகத்துடன், எம்முடன் அன்பாக பழகிய உங்கள் அந்த இனிய தன்மை எங்கள் மனங்களில் என்றும் உயிருடன் இருக்கும். நீங்கள் எங்களுக்கு சொல்லித் தந்த நல்லறிவுகள், நற்பண்புகள், நேர்மையுடன், ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்ற உங்கள் போதனைகள் இப்போது ஒவ்வொன்றாக எங்கள் நெஞ்சில் விளக்காய் ஏற்றப்படுகின்றன. அவை எங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும், உங்களை அறிந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை முழுவதும் வழிகாட்டும் ஒளியாக இருக்கும். உங்களை அறிந்த அனைவரும் உங்கள் நேர்மை, உங்கள் பாசம், உங்கள் நற்குணங்களை எங்கு பேசினாலும், எங்கள் நெஞ்சு நெகிழ்கிறது. “எவ்வளவு அருமையான மனிதர்” என்று உங்களைப் பற்றி அனைவரும் சொல்லும் அந்த வார்த்தைகள் எங்கள் மனங்களை உணர்ச்சியால் நிரப்புகின்றன. உடல் பிரிந்தாலும், உங்கள் நினைவுகள், உங்கள் வழிகாட்டல், உங்கள் வாழ்வின் நெறி எங்கள் வாழ்க்கை முழுவதும் எங்களுக்கு வழிகாட்டியாகவே இருக்கும். 🙏🙏🙏🙏😢😢😢
அண்ணன் வேலாயுதம்பிள்ளைக்கு ஒரு அஞ்சலி மீசாலை வடக்கை நிரந்தர வதிவிடமாகவும் சுவிட்சர்லாந்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர் வேலாயுதம்பிள்ளை அவர்களது துயரச் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைகின்றோம்....