யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும், சுவிஸ் Benken(St. Gallen)ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வேலாயுதம்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்று ஆகியும் மனம் ஆற மறுக்கின்றதே
சிரித்த முகத்தோடும் செயற்திரன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த எங்கள் தெய்வமே!
நாட்கள் 31 ஐக் கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள்!
கண்ணின் மணிபோல் எம்மைக் காத்த
எம் அன்பு தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் விதித்ததோர் விதியதனால்
விண்ணகம் சென்றதைப் பொறுத்திட முடியவில்லையே
உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது
உங்கள் நினைவலைகள்!
பாசத்துடன்
பிறப்பிடமாய் பரினிலே!"
நேசத்துடன் எம்மை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்த எம் குலவிளக்கே!
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.