Clicky

தோற்றம் 11 FEB 1938
மறைவு 08 JAN 2026
திரு கந்தையா வேலாயுதம்பிள்ளை
வயது 87
திரு கந்தையா வேலாயுதம்பிள்ளை 1938 - 2026 கொடிகாமம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பாலசந்திரன், மீசாலை வடக்கு 10 JAN 2026 Sri Lanka

அண்ணன் வேலாயுதம்பிள்ளைக்கு ஒரு அஞ்சலி மீசாலை வடக்கை நிரந்தர வதிவிடமாகவும் சுவிட்சர்லாந்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர் வேலாயுதம்பிள்ளை அவர்களது துயரச் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைகின்றோம். வேலாயுதம் அண்ணன் அவர்களும் அவரது குடும்பத்தினரும் ஊரிலும் சரி புலம்பெயர்ந்து இருந்தாலும் சரி எங்களுடன் எப்பொழுதும் அன்பாகவும் ஆதரவாகவும் பழகும் சுபாவம் உடையவர்கள். இன்னும் தட்டாங்குளம் பிள்ளையாரின் திருப்பணியுடன் மிகவும் ஈடுபாடு கொண்டு, பிள்ளையாரின் திருப்பணியில் கணிசமான பங்கு கொண்டதையும் எம்மால் மறக்க முடியாது. சிரித்த முகத்துடன் எம்முடன் பழகும் அவரது பிரிவு மறக்க முடியாதது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறுவதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக. பாலசந்திரன் குடும்பம் மீசாலை வடக்கு