நன்றி நவிலல்
அன்னை மடியில் 25 NOV 1934
ஆண்டவன் அடியில் 21 JUN 2021
திரு கந்தையா இராசரத்தினம்
ஆசிரியர்- அளுத்கம, யா/ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரி, அதிபர் - ஞானாசாரியார், இடைக்காடு மகா வித்தியாலயம், பூநகரி மகாவித்தியாலயம், வட்டாரக் கல்வி அதிகாரி- மன்னார், கல்வி அமைச்சு நிர்வாகி - கொழும்பு, Head of Science Department - Ethiopia, Zambia, South Africa (Transkei)
வயது 86
திரு கந்தையா இராசரத்தினம் 1934 - 2021 பளை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

கிளிநொச்சி பளை இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி இடைக்காட்டை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

 எமது குடும்பத்தின் பாசத்தலைவனாய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து
அன்பையும் அரவணைப்பையும் தந்து
எங்களைத் தவிக்கவிட்டு அமைதியாய்
விண்ணுலகு சென்றீர்களே

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 01 Jul, 2021