2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
13
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாலசுந்தரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-08-2022
அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை
அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்
உயிரிலும் உணர்விலும்
ஒன்றாக கலந்திருந்தாய்
உயிர் உள்ள வரை உங்களோடு
இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை
நாம் உன்னோடு இருந்தவரை
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் அப்பா!!!
அப்பா என்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும் உங்கள் நினைவுகள் அப்பா!
தகவல்:
குடும்பத்தினர்