Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 SEP 1943
இறப்பு 06 AUG 2020
அமரர் கந்தையா பாலசுந்தரம்
வயது 76
அமரர் கந்தையா பாலசுந்தரம் 1943 - 2020 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாலசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...

என்னை ஏன் தனியாக தவிக்க வைத்தாய்
நீமட்டும் கல்லறையில் மீளாநித்திரையில்
நானோ உன் நினைவுகளோடு வேதனையுடன்
தனிமையில் தவித்து மாள்கிறேன்

அப்பா உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

பாலகராக இருந்த நாம்
பருவ வயதடைந்து வளர்ந்து நிற்கின்றோம்
கூட நின்று தோள் தட்ட
துணையாக நீங்கள் இல்லையேயப்பா?

ஆருயிர் துணை இழந்து
அன்னை படும் துயரம்
ஆற்ற முடியாமல்
கண்ணீரினில் நாம் கலங்கி தவிக்கின்றோம்

நீங்கள் எங்கு சென்றாலும்
எங்கள் நினைவு
உங்களை சுற்றி வரும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

உங்கள் நினைவால் வாடும் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்....

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 07 Aug, 2020
நன்றி நவிலல் Fri, 04 Sep, 2020