39ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா அரியரட்ணம் அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 08-11-2026 (ஐப்பசி அமாவாசை)
ஆண்டுகள் முப்பதொன்பது உங்களை
இழந்த சோகம் மாறவில்லை அப்பா!
காலங்கள் எவ்வளவு கடந்தாலும் மாறாது
மறையாது உங்கள் அன்பும் பாசமும் அப்பா!
அன்புடையது எதுவும் இல்லை
அருகில் உள்ள எதுவும் அன்பு கொண்டது இல்லை
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
புரிந்து கொள்ள யாருமில்லை
உங்களை நினைக்காத நாளில்லை
நித்தம் நித்தம் நினைத்து
எம் உள்ளம் தணலாய் வெடிக்குது அப்பா!
நிஜமான உங்களை எங்கள் அருகில்
வைத்து வாழ ஆசைப்படுகிறோம்
ஆனால் நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர்!
உங்கள் பிரிவால் வாடும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
தகவல்:
தயாளினி பிரபாகரன் (இளைய மகள்) - Nottingham
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute