உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 24-10-2022
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா அரியரட்ணம் அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களை இழந்து
ஆண்டுகள் 35 ஆனாலும் அப்பா உங்கள் அன்பு முகமும் அமைதியின் உருவமும் நேசப் புன்னகையும் மறையவில்லை
நீங்கள் இவ்வுலகில் நேர்வழி காட்டி
நாம் சென்ற பாதையெல்லாம்
நல்லவராய் வேண்டுமென்று
கண்மணி போல் காத்திருந்த எங்கள் அப்பாவே! எங்கு சென்றீர்கள்?
நாங்கள் ஏற்றமுறும் காலத்திலே
வாடவிட்டு சென்றதேனோ
எங்கள் இன்பத்திலும் துன்பத்திலும்
நீங்கள் இல்லாமையை
எப்போதுமே உணர்கின்றோம்
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
35 ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!
நீங்கள் எமக்கு வழிகாட்டியாய்
எங்கள் இதயத்திலேயே வாழ்கிறீர்கள் அப்பா!
உங்கள் பிரிவால் துயருறும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்