![](https://cdn.lankasririp.com/memorial/notice/205501/f2873f7c-fb47-425f-b238-f0e9a3bc6617/22-61d7dd16e532c.webp)
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Speyer, Kassel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா ஆனந்தநாதன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புகாட்டி எம்மை ஆதரித்து
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டு இன்று
ஆண்டு 4 ஆனபோதும்
அனுதினமும் நீங்கள் அசைந்து திரிந்து
இடமெங்கும் உங்கள்
திருமுகம் தோன்றுதிங்கே!
நாம் இந்த மண்ணில் வாழும்வரை
நம் இதயத் தோட்டத்தில் ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும் உங்கள்
நினைவுகளை மறக்கத்தான் முடியவில்லை
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
நான்காண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
பாசத்தின் முழு உருவம் என் அப்பா
பாதியிலே எம்மை விட்டு ஏன் போனீர்கள்
என் அடுத்த பிறவியிலும்
அப்பாவாய் நீங்களே வரவேண்டும்
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எம் உயிர் நீர் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம் !
உங்கள் பிரிவால் துயருடன் வாழும்
குடும்பத்தினர்..!
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.