யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Speyer, Kassel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஆனந்தநாதன் அவர்கள் 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனி Kassel இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இந்திராவதி தம்பதிகளின் அன்பு மகனும், கட்டப்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நடராஜா தனலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
அனிசன், கயானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கமலராணி, புஸ்பராணி, மனோராணி, செல்வநாதன், காலஞ்சென்ற பரமநாதன், சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அண்ணாமலை, சந்திரன், டேவிற், சந்திரபோஸ்(ஜேர்மனி), சோமகலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தர்மலிங்கம், சோதி, கணேசலிங்கம், சுகுமார், புஸ்பமாலா ஆகியோரின் அன்புச் சகலனும்,
சயிலா, ஜெயக்குமார், துசாந்தன்(மலேசியா), சர்மிலா, அஜந்தன்(பிரான்ஸ்), தஸ்மின்(லண்டன்), சதீஸ்குமார், காலஞ்சென்ற பிரேம்குமார், மொரீஸ்குமார், சௌமியா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.