1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 SEP 1977
இறப்பு 08 AUG 2021
அமரர் காண்டீபன் ஜெகநாதன்
அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் வாகரை
வயது 43
அமரர் காண்டீபன் ஜெகநாதன் 1977 - 2021 கன்னாதிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கன்னாதிட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு ஆரையம்பதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த காண்டீபன் ஜெகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

றமணா, மனதில் ஆயிரம் நினைவுகளை ஆழமாய் பதித்துவிட்டு
அவசரமாய் சென்று மறைந்தாயே…
 வசீகரம் நின் தோற்றத்தில் மட்டுமல்ல,
உன் வார்த்தைகளிலும் கூடவே
 உன் அன்புக் காண்டீபம் துளைத்த உள்ளங்கள் ஆயிரமாயிரம்
 இளையோரில் நீ இளையவன்,
முதியோரில் நீ மூத்தவர் என்றிருந்து மகிழ்விப்பாயே
 உனை அறிந்தோர் அனைவருமே உன் உறவுகளாய் நின்று
மௌனம் காக்கின்றனர் இங்கே
 அளவும் முடியவில்லை – ஆறவும் முடியவில்லை …

தூரத்தில் எங்கோ நிற்பதாய் ஓர் உணர்வு
 விண்ணில் மின்னும் அந்த பிரகாசமான நட்சத்திரமாய் இன்று நீ…
இங்கே அனைத்துமே காலாவதியாவதுதான் – ஆனாலும்
 ஏன் இந்த அவசரம் , உனை போன்ற நல்ல உள்ளங்களில் ?
 காலனையும் நீ கவர்ந்தாயோ?

 நின் ஆத்ம சாந்தி வேண்டி
என்றென்றும் வழிபடும்,
 குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos