யாழ். வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமித்துரை வள்ளிநாயகி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-01-2025
அன்னையே எங்கள் அன்புத் தெய்வமே
ஆயிற்று ஓராண்டு நீங்கள் மறைந்து
மாதம் ஒரு மாசியம் வந்தது
கூடியிருந்து உங்கள் கதைபேசி உண்டோம்!
பாலுடன் பாசத்தை ஊட்டி வளர்த்தவரே
பரிதவிக்கிறோம் பாசத்தை இழந்து
உங்கள் ஆசியால் பெற்ற உயர்கல்வியால்
உவகை கொள்கிறார்கள் பேரப்பிள்ளைகள்!
எங்கள் இதயங்கள் இன்பச்சுமையால் கனக்கின்றன
அங்கே சிம்மாசனம் போட்டு நீங்கள் வீற்றிருப்பதால்
எங்கள் நாடி நரம்பெல்லாம் ஓடித்திரிகிறீர்கள்
சற்றே ஓய்வெடுங்கள் அம்மா!
நின்றால், நடந்தால், இருந்தால் உங்கள் நினைவுகள்
உறங்கினால் உங்கள் கனவுகள்
சந்திரனில் உங்கள் முகத்தைப் பார்க்கிறோம்
சந்திரன்தான் தினமும் வருவதில்லையே!
நித்தம் ஏற்றுகிறோம் குத்து விளக்கை
அதன் ஒளியில் உங்கள் வண்ணமுகம் காண
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப்
பிராத்திக்கின்றோம்!
our heart felt condolences to your family.