

யாழ். மருதங்கேணி தெற்கு தாளையடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Lørenskog ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை திருஞானசம்பந்தர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனைவி....!
இன்று நீங்கள் இல்லாமல் தனியாய் தவிக்கின்றேன்
நாம் வாழும் காலம் வரை உங்கள் நினைவுகளும்
எங்கள் உள்ளத்தில் வற்றாத ஊற்றாகப் பொங்கிப் பெருகும்.
பிள்ளைகள்....!
எம்மோடு இருந்து
எம்மையெல்லாம் இயக்கி
எமக்கு வழிகாட்டி
பாசமிகு தந்தையாய் பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நீங்கள் பண்புடனே வாழ பக்குவமாய்
சொன்ன வார்த்தைகள் என்றும்
எம் மனங்களில் வாழுதையா...!!!
தன்னுடைய கடமைகளை கவனமாக
செய்து முடித்து
தனியாக இப்போது எம்மை
விட்டு போய்விட்டார்
ஆண்டு மூன்றல்ல
ஆயிரந்தான் சென்றாலும்
உங்கள் தோற்றமும் உங்கள் சிரிப்பும்
நாம் உள்ள வரை நெஞ்சில்
நிறைந்து இருக்கும்
பேரப்பிள்ளைகள்....!
எமது அன்பிற்குரிய தாத்தாவே
அன்பிற்கும், பண்பிற்கும், பாசத்திற்கும்,
நேசத்திலும் எங்களை மகிழ்வித்தாய்
எனது அன்பிற்கினிய மனிதனாக
உமது பேரப்பிள்ளைகளுக்கு ஒளிகாட்டியாக
ஒளி தந்த கலங்கரை விளக்கே
எங்கள் இதயத்தில் நீங்கள் தான்
என்றும் நிறைந்துள்ளிர்கள்
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
குடும்பத்தினர்...
அன்னாாின் ஆத்மா சாந்தியடையவும், எங்கள் குடும்பத்தினாின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தொிவிக்கின்றோம். (தணிகாசலம் குடும்பம்)