

யாழ். மருதங்கேணி தெற்கு தாளையடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Lørenskog ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை திருஞானசம்பந்தர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு கடுகதியில் கரைந்தோடிச் சென்றாலும் – உங்கள்
நினைவுகள் கல் மேல் பொறித்த எழுத்துக்கள் போல்
எங்களை விட்டு அகலவில்லை!
அப்பா எங்கள் இன்ப துன்பங்களை – நீங்கள்
அருகிருந்து பங்கெடுத்து கொள்வதை
நாம் உணர்கின்றோம் – நீங்கள்
இல்லையெனும் உணர்வே
நெஞ்சுருகி கொல்லுதப்பா!
இருந்தாலும் என்றென்றும் எங்களுக்கு
இறைவன் நீங்கள் தான் அப்பா!
நீங்கள் வளர்த்த உங்கள் பேரக்குழந்தைகள்
அம்மப்பா எப்பவருவார்
என்று செல்லக் குரலால் கேட்கிறார்களப்பா
என்ன பதில் சொல்ல எப்படி பிஞ்சு உள்ளங்களைத் தேற்றுவது
வாடி வதங்கி ஒதுங்கி நின்றோம்ப்பா.
எங்கள் அம்மா உங்கள் நினைவுகளை சுமந்தபடி
விழிநீரற்ற உலர்வுழிகளோடு உள்ளம் கரைந்து
தினமும் மனமுடைந்து வாழ்கிறாரப்பா
அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல எங்களால் முடியாமல் இருக்கிறதப்பா
என்றும் நாம் மறக்கமாட்டோம்
உம்மை நினைத்தே நாமிங்கு வாழ்கின்றோம்
உத்தமரே பெற்றிடுக சாந்தி எம் வாழ்வில்
நீங்கள் இல்லை என்ற எண்ணம் எமக்கில்லை
வாழ்வீர் எம்மனதில் நாம் வாழும் காலம்வரை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாாின் ஆத்மா சாந்தியடையவும், எங்கள் குடும்பத்தினாின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தொிவிக்கின்றோம். (தணிகாசலம் குடும்பம்)