Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 15 DEC 1930
விண்ணில் 11 OCT 2011
அமரர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம்
(ஒய்வுபெற்ற பிரதமலிகிதர், சமாதான நீதவான்)
வயது 80
அமரர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் 1930 - 2011 கைதடி, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி. 

பதினைந்து வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே எங்கள்
மனது  அழுவதை நீங்கள்
உணர்வீர்கள் உணர்ந்து
கொண்டேயிருப்பீர்கள் அப்பா!

உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள்
எங்கள் வாழ்வில் சுடர்விடும்
ஒளியாய் மலர்கின்றன
சிந்தை குளிர சிரிப்பொலி
ஒலிக்கும் அன்பு வதனம் எங்கே?

உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
பதினைந்து வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்!

எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எம் நெஞ்சை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos