Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 APR 1938
இறப்பு 30 JUN 2018
அமரர் கணபதிப்பிள்ளை சிவலிங்கம்
சிவலிங்கம் மோட்டோர்ஸ் மற்றும் Transport உரிமையாளர்
வயது 80
அமரர் கணபதிப்பிள்ளை சிவலிங்கம் 1938 - 2018 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 02/07/2026

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
எட்டு ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்- அப்பா

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
   இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

தகவல்: சிவரூபன்(மகன்)

Photos