Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 APR 1938
இறப்பு 30 JUN 2018
அமரர் கணபதிப்பிள்ளை சிவலிங்கம்
சிவலிங்கம் மோட்டோர்ஸ் மற்றும் Transport உரிமையாளர்
வயது 80
அமரர் கணபதிப்பிள்ளை சிவலிங்கம் 1938 - 2018 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஏழு ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன்
தன்னோடும் செம்மையாய்
வாழ்ந்த அப்பா!

ஆண்டு ஏழு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள்
 நினைவலைகள் அப்பா!

கண்ணின் மணி போல்
எம்மைக் காத்த அன்புத் தெய்வமே
 ஆறிடுமோ எங்கள் துயரம்
 விதித்ததோர் விதியதால்
 விண்ணகம் சென்றதைப்
பொறுத்திட முடியுமோ தான்?

அப்பா, உங்கள் அன்பு
முகம் மறைந்தாலும் அழியாது
 நினைவலைகள்! பாசத்தின்
பிறப்பிடமாய் பாரினிலே!

நேசத்துடன் எங்களை ஆளாக்கி
 நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!

தகவல்: குடும்பத்தினர்

Photos