அமரர் கணபதிப்பிள்ளை விஜயரட்ணம்
(இளைப்பாறிய கிராம சேவக லிகிதர் VC Clark- உயிலங்குளம் மன்னார்)
பிறப்பு: 24-05-1933
இறப்பு: 05-01-2022
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கை வதிவிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை விஜயரட்ணம் மற்றும் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கெல்லாம் நல்வழி காட்டிய தீபமே!
எம் குடும்ப விளக்கே!
நீங்கள் எம்மை விட்டுச் சென்று
மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டதே
நம்ப முடியவில்லை நாளும் தெரியவில்லை!
உங்கள் இனிய அன்பான கதைகள்
எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன
உங்கள் சிரித்த முகம் அன்பான பார்வை கொண்ட தோற்றம்
எம் கண்களில் தெரிகின்றதே
எங்களிடமிருந்து உங்கள் உயிரைப் பறித்த விதியை
என்னென்று சொல்வது அப்பா!
உங்களை நினைக்காத நாளுமில்லை
கண்ணீர் விட்டு அழாத நேரமுமில்லை
அப்பா நீங்கள் எம்முடன் கூடவே இருக்கின்றீர்கள்
அப்பா நீங்கள் மறையவில்லை
என்றென்றும் எங்களுடன் வாழ்கின்றீர்கள் அப்பா...
----------------------------------------------------------------------
அமரர் விஜயரட்ணம் சாரதாதேவி
பிறப்பு: 23-12-1934
இறப்பு: 10-03-2022
யாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயரட்ணம் சாரதாதேவி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமே
பாசத்தின் பிறப்பிடமே
எங்கள் அம்மாவே!
எங்கு சென்றீர் எம்மை விட்டு!
அன்று நீங்கள் தாயாக இருந்தீர்கள்
இன்றோ தெய்வமாகி விட்டீர்கள்
ஆதலால் கைகள் தொழுகின்றன
எம் கண்கள் அழுகின்றன!
அழுத கண்கள் வரண்டு
ஈராண்டு போச்சு!
ஆண்டு மூன்று போனாலும்
அன்பு கொண்ட உள்ளம் தான் மாறிடுமோ
ஆயிரம் உறவுகள் இங்கிருந்தாலும்
அம்மா என்ற உறவு இனி வருமோ?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனை வேண்டுகின்றோம்...