யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:-18-08-2022
ஐந்து விரல் நீவி அழகாக வழி நடத்தி
செந்தமிழால் எம்மை செம்மையால் நெறிப்படுத்தி
கந்தன் நாமம் கடைசிவரை உச்சரித்து
தந்தையாய் தரணியில் தவமாய் கிடைத்து
உந்தன் பேர் சொல்ல எமைத் தந்த அப்பா
சிந்தையில் சிலையாகி சிவனிடம் செல்ல
வந்த காலன் வரவழைத்துச் சென்று- அவன்
தந்த கண்ணீருக்கு அகவை ஓர் ஐந்து
வெந்த புண்ணில் வேல் பாய்ந்த இழப்பது போல்
எந்த உயிர்க்கும் வராமல் வரம் வேண்டும்
விந்தை உலகில் வேடிக்கை என்றாலும்
சொந்த அனுபவம் சொல்லத்தான் தூண்டும்
அறநெறியை அன்புவழி அள்ளித்தந்தது
அழகு தமிழுக்கு அருமைத் திருக்குறள்
உறவுமுறை உண்மையினை சொல்லித்தந்தது
உன்னதமான உங்கள் உரிமைக்குரல்
குறள் பாட்டில் பொருள் உறங்கும்- உங்கள்
அரும் பாட்டில் பொருள் குவியும்
ஆறணங்கைப் பெற்று ஆபரணங்கள் பூட்டி
ஊர் விழிகள் உயர உலாவிட்ட உத்தமன்
கார்முகிலாய் காலமெல்லாம் பொழிந்த உங்கள்
பேர் விளங்க வாழ்வோம் பிதா உங்கள் ஆசியுடன்
Rest in peace.