3ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம்
1928 -
2017
மண்டைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி : அபரபட்ஷ சப்தமி
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
வள்ளுவன் குறள் சொல்லிடும் பொருளில்
எள்ளளவும் மாறாத எங்கள் அப்பா
சொல்லுக்கும் செயலுக்கும் சுத்தம் வேண்டுமென
சொல்லாமல் சொன்ன பல்கலைக் கழகம்
சோதனை வந்தாலும் சொந்தக் காலில் நில் என்று
போதனை செய்த முதல் ஆசிரியன்
எந்த இடர் வந்தாலும் ஏன் கண்ணில் நீர் என்று
முத்தமிட்டுச் சொன்ன உற்ற நண்பன்
எம் வாழ்க்கைப் படகின் சிறந்த சாரதி
என்றும் எமக்கு இனிய கவிப் பாரதி
ஈன்று எம்மைத் தந்தவன் இரு விழிகள் மூடி
மூன்று ஆண்டுகள் முறையாய் செனறாலும்
நினைந்து நினைந்து நித்தம் கலங்கியதால்
நனைந்த விழிகள் தான் நம் விழிகள்
என்றும் உங்கள் நினைவுடன் மனைவி, மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace.