திதி: 08-01-2026
யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை திருச்செல்வம் அவர்களின் 22ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
ஆண்டு இருபத்திரண்டு எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால் வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும் எம்மை விட்டகலாது...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தொடர்புகளுக்கு
- Mobile : +447702595643