யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை திருச்செல்வம் அவர்களின் 90வது ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி.
இன்று உங்களின் 90வது ஆண்டு பிறந்தநாள்
நீங்கள் எங்களைப் பிரிந்து
இருபது ஆண்டுகள் ஆனது
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!
ஒரே பிள்ளையாய் பிறந்து
மூன்று பிள்ளைகள்
எம்மை படைத்து வளர்த்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனிய சொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள்
மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும்
ஏதோ ஓரிடத்தில்
உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா
என ஏங்குவோம்...!
உங்கள் வளர்ப்பில்
நாங்கள் தன்னம்பிக்கையுடன்
சொந்தகாலில் மிளிர்கிறோம்
உங்களின் மீதான
எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
தொடர்புகளுக்கு
- Contact Request Details