31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 16 APR 1961
இறப்பு 23 AUG 2022
திரு கணபதிப்பிள்ளை சுதர்சன் (குழந்தை, சுதன்)
ஈழம் டக்சி உரிமையாளர்
வயது 61
திரு கணபதிப்பிள்ளை சுதர்சன் 1961 - 2022 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Busswil Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சுதர்சன் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த ஏன்?
எங்கே? பிரிந்து போனீர்கள்!

உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள்,
மதிப்புக்கள் எல்லாம்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும் அப்பா

நாம் இந்த மண்ணில் வாழும் வரை
நம் இதயத் தோட்டத்தில் ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும்
உங்கள் நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

கணபதிப்பிள்ளை சுதர்சன் அவர்களின் மறைவு செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைவேசியூடாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும், அன்றைய தினம் காலை 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை Musikpavillon, Bielstrasse 4, 3294 Buren a/A எனும் முகவரியில் நடைபெறும் மதிய போசன நிகழ்வில் கலந்து கொள்ளும் வண்ணம் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிதர்சன்(நித்து) - மகன்
அகர்சன் (அஜி) - மகன்
ஆதி - மருமகன்
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்