

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Busswil Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சுதர்சன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றபோதும்
ஆறாத் துயரிலிருந்து மீழத் தெரியவில்லை...
அழுது அடங்கிய எங்கள்
விழிகளிலெல்லாம் வெறுமை
மட்டுமே மிஞ்சிக் கிடக்கிறது.
அலைகளற்ற கடல் போல்
அமைதியாய் கிடக்கும்
எங்கள் வீடு மீண்டும் மீண்டும்
உங்கள் பிரிவை சொல்லித் திரிகிறது.
வாரி வாரி இறைத்தாலும் - உங்கள்
வீட்டுத் தோட்டமெல்லாம்
வாடியே கிடக்கிறது.
அவை கூட உங்கள் பிரிவை
ஏற்க மறுக்கிறது.
நான்கு சுவற்றுக்குள் முட்டி
மோதும் உங்கள் நினைவுகளுடன்
ஒவ்வொரு பொழுதுகளும்
யுகங்களாக கழிகின்றது.
கண்கள் பனித்து கண்ணீர்
தூவி வழியனுப்பி இன்றுடன்
ஓராண்டு கடந்து விட்டது.
மரணிக்க மறுக்கும் உங்கள்
நினைவுகளுடன் உங்கள் ஆத்மா
சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.