Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 APR 1961
இறப்பு 23 AUG 2022
அமரர் கணபதிப்பிள்ளை சுதர்சன் (குழந்தை, சுதன்)
ஈழம் டக்சி உரிமையாளர்
வயது 61
அமரர் கணபதிப்பிள்ளை சுதர்சன் 1961 - 2022 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Busswil Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சுதர்சன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு இரண்டு சென்றபோதும்
ஆழாத்துயரிலிருந்து மீழமுடியவில்லை.
அழுது அடங்கிய எங்கள் விழிகள்
வெறுமையாய் கிடக்கிறது.

அமைதியாய் இருக்கும் எங்கள் வீடு
மீண்டும் மீண்டும் உங்கள் பிரிவை
நினைவு படுத்துகிறது.
எப்படித்தான் பார்த்தாலும்
உங்கள் வீட்டுத் தோட்டம்
கூட உங்கள் பிரிவை ஏற்க மறுக்கிறது.

நான்கு சுவற்றுக்குள் முட்டி மோதும்
உங்கள் நினைவுகளுடன்
ஒவ்வொரு பொழுதும்
யுகங்களாய்க் கழிகிறது.

மறக்க மறுக்கும்
உங்கள் நினைவுகளுடன்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்திக்கின்றோம்.

தகவல்: மனைவி, மக்கள், குடும்பத்தினர்