![](https://cdn.lankasririp.com/memorial/notice/209491/bfac55fd-ee2f-46f7-a97c-9889dbb17060/21-6158ed26ce1ce.webp)
புகழ்மிகு மீசாலையம் பதியில் , பிரபல சிட்டிபுரம் உபயகார்ர் அமர்ர் சின்னத்தம்பி ( சரக்கர்) அவர்களின் மகவாக உதிர்த்தவர் புஸ்பலீலா அம்மையார் . அந்தக்காலத்தில் சின்னத்தம்பியை அறியாதவர் இருந்திருக்க வாய்பில்லை . அவரைப்பற்றி எழுத்தாளர் டானியல் அவர்களின் பஞ்சமர் என்னும் நாவலில் வாசித்தறியலாம் . அத்தகைய நீண்ட சைவப்பாரம்பரியமும் சமூகசேவையும் , பெயரும் புகழுமுடைய குடும்பத்தில் உதிர்த்த காரணத்தால், தந்தையாரின் காருண்ய குணமும் அம்மையார் புஸ்பலீலா அவர்களிடத்தில் காணப்பட்டது . அவருடைய மகன் கரன் வகுப்புத்தோழனாக இருந்தபடியால் , அந்த குடும்பத்தினரோடு பழக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது . தனது பிள்ளைகளை கண்டிப்போடும் அன்போடும் வளர்ந்த அருமைத் தாயாவர் . மற்றவர்களின் மனது நோகாதவாறு பழக்கூடிய பண்பாளர் . அத்தகைய அம்மாவின் இழப்பு , ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு . அம்மாவின் ஆத்ம சிட்டிபுரம் கண்ணகியின் பாதாரவிந்ததில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். ஒம் சாந்தி !!!
அம்மாவுக்கு நிகராக உயர்வானது ஒன்றும் கிடையாது. அம்மாவின் பிரிவால் வருந்தும் கரன் மற்றும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெருவிப்பதுடன் அம்மாவின் புனித ஆத்மா சாந்தி அடையவேண்டி...