யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகசபை புஸ்பலீலா அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கு அமரர் புஸ்பலீலா கனகசபை அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு ஓடோடி வந்து எமது துயரில் பங்குகொண்டு ஆறுதல் கூறியவர்களுக்கும் பல்வேறு உதவிகள் புரிந்த உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அன்னாரின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் தொலைபேசி மூலமும், சமுகவலைத்தளங்கள் மூலமும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள், பதாகைகள் ஊடாக அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும் 01-11-2021 திங்கட்கிழமை அன்று நடைபெறும் அன்னாரின் அந்தியேட்டிகிரியை சபிண்டிகரணக்கிரியைகளை செய்த அர்ச்சகர்களுக்கும் கிரியைகளில் பங்கு கொண்டவர்களுக்கும் இம்மரணச்செய்தியை உலகறியச்செய்த Lanka Sri ஒலிபரப்புச்சேவைக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
அம்மாவுக்கு நிகராக உயர்வானது ஒன்றும் கிடையாது. அம்மாவின் பிரிவால் வருந்தும் கரன் மற்றும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெருவிப்பதுடன் அம்மாவின் புனித ஆத்மா சாந்தி அடையவேண்டி...