1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகரட்ணம் ரட்ணமகேசன்
பழைய மாணவர்- கொக்குவில் இந்துக் கல்லூரி
வயது 74
அமரர் கனகரட்ணம் ரட்ணமகேசன்
1947 -
2021
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கு பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் ரட்ணமகேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதுவே
எமையழவிட்டு
ஆறிடுமோ
எம் துயரம் எமை விட்டு
மாண்டவர் மீண்டதில்லை
இது மானிட நியதி
ஆனாலும்
ஆண்டவன் செயலை எண்ணி
ஆறிடவும் முடியவில்லை
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர் அப்பா!
தேடித் தவிக்கின்றோம்
தென்படுமிடமெல்லாம்
காணாமல்
கேளாமல் கலங்குகின்றோம்
நாம் தினமும்
காத்திருக்கும்
உம் உறவுகளின் கவலை
தீர்க்க
கல்லறை திறந்து
வருவீரோ ஒருமுறை அப்பா..!!
காலங்கள் விடை பெறலாம்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும்
எம் உயிர் உள்ளவரை
உம்
நினைவில் வாழ்ந்து
கொண்டிருப்போம் அப்பா...!!!
பிரிவால் நினைவுக்கூரும்
உம் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்
தேவன் மாமா, நீங்கள் இவ் உலகை விட்டு போய் விட்டாலும், உங்கள் நினைவுகள் எங்களை விட்டுப் போகாதே! உங்கள் நல்மனமும் நற்பணிகளும் உங்களை சொர்க்கத்திற்கு எடுத்துச் சென்றிருக்கும்....