10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herzogenbuchsee ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா நவராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-08-2025
கண்மூடித்திறக்கும் முன் எம்மை விட்டுப் பிரிந்து
பத்து ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா
பார்க்கும் இடங்களெல்லாம் உங்கள் புன்னகை
பூத்திருக்குதம்மா நீங்கள் எம்மோடு இருந்து
வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா
நீங்கள் எமை விட்டுப் பிரிந்தாலும்- தாயே
நித்தலும் உங்கள் நினைவு நெஞ்சில் நிழலாடுதம்மா
எம் சொப்பணத்தில் நீங்கள் சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா
பத்தாண்டுகள் ஆனால் என்ன
ஓராயிரம் வருடங்கள்
ஓடினால் என்ன, என்றும் உங்கள் பிரிவால்
நாம் துடிக்கின்றோம் அம்மா..
தகவல்:
ந.கணேஷ்குமார்(மகன், சுவிஸ்)