4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herzogenbuchsee ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா நவராசா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்காண்டு நகர்ந்ததம்மா
நாமகளே நாம் மகிழ்ந்து
நாவெல்லாம் தேம்புதம்மா
நம்மவளே உம் பெயர் சொல்லி
அம்மா....
எம் அன்புக்குரியவளே
அன்பென்ற சொல்லின்
அர்த்தத்தை காட்டியவளே
ஊரெல்லாம் உனைச் சொல்லி
ஓடிவரும் வேளையிலே
உந்தன் உழைப்பின்
உச்சமறிகின்றோம்
பாசத்தை பகிர்ந்தளித்த பாமகளே
பசியென்று வந்தோர்க்கு
பையிலும் நீ கொடுத்தீர்
அம்மா...
எம் தெய்வமே எமக்காய்
உமை உருக்கிய எம்மவளே
மறு ஜென்மம் வந்தாலும்
நீயே எம் தாயாக வர வேண்டும்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்