Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 27 MAY 1947
இறப்பு 17 MAY 2026
திருமதி கனகலிங்கம் புவனேஸ்வரி 1947 - 2026 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு , கொழும்பு Slave Island ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் புவனேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா மாதம் ஒன்று ஆனதுவே
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!

கனவுகள் பல கண்டு
ஆசிகளுடன் எம்மைப் பிரிந்த
ஏம் இனிய அன்னையே!

நாட்கள் பல உருண்டோடினாலும்- உன்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா

எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!

மாதம் பல உருண்டு சென்றாலும்
உங்களை எங்கள் உயிர் உள்ளவரை
தெய்வமாக பூசிப்போம்.!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்