1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 31 JUL 1955
உதிர்வு 04 DEC 2020
அமரர் கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி (சச்சி, அம்பிகா)
வயது 65
அமரர் கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி 1955 - 2020 சுன்னாகம் சூராவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 58 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகம் ஊராட்டி சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா! நீங்கள் மண்ணில் மறைந்து
ஓராண்டு ஆயினும்
எங்கள் நெஞ்சில் நிலையாய் என்றும் நிறைந்துள்ளீர்கள்
ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்
அம்மா உங்கள் அன்புக்கு ஈடாகுமா?

கனவுகளை நாங்கள் சுமந்து
கண்களில் நீர் சொரிந்து
கலங்குகிறோம் உங்கள் நினைவால்
இந்த நாள் எம்மால் மறக்கமுடியாத நாள்!
நாங்கள் மறக்க விரும்பாத துயர நாள்!

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும் என்றும்
உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 07 Dec, 2020
நன்றி நவிலல் Mon, 04 Jan, 2021