2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கலைமதி செல்லத்துரை
BBA(HONS) DIP IN PUB ADM, MA IN PUB ADM, LLB(HONS), கணக்காளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை- யாழ்ப்பாணம், முன்னாள் கணக்காளர்- மன்னார், தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம், முன்னாள் போதனாசிரியர் அஞ்சல் பயிற்சிக் கல்லூரி- யாழ்ப்பாணம்
வயது 47
Tribute
23
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பணிக்கர் லேனை வதிவிடமாகவும் கொண்டிருந்த கலைமதி செல்லத்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எனைவிட்டுப்போய்
ஆண்டு இரண்டு ஆனாலும்
உம் நினைவோடு
எங்கள் நாட்கள் கரைகிறதே...
எம் வாழ்வில் தென்றலென
வந்துதித்த எம் செல்வமே
பண்பின் உறைவிடமாய்!
பாசத்தின் திருவிளக்காய்!
அறிவின் சிகரமாய் மிளிர்ந்த
என் அன்புச் சகோதரியே...
எங்கள் நிலாவே... நீ எங்கே?
நிலவுபோல் எங்கள் உள்ளத்தில்
நீங்கள் இடம்பிடித்து நித்தமும்
புன்னகையுடன் வலம் வந்தவளே....
எங்கள் அன்புச் செல்வம் நிலாவே...
இன்று உன் உருவம் காணாது
உருகுகின்றது உள்ளமெல்லாம்
அன்பால் எம்மை அரவணைத்து
பண்பாலே எமை வழிநடத்தி
நிலையில்லா வாழ்வினிலே
நீங்காத நினைவுகளைத் தந்து
நிலையான வாழ்வு தேடிச் சென்றீரோ...
தகவல்:
குடும்பத்தினர்