6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கைலாசபிள்ளை ஜெயக்குமார்
1941 -
2020
புங்கன்குளம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அரியாலை புங்கன்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
இயற்கையின் அழைப்பிதழில் உங்கள்
பெயரும் இருந்ததை நாம் அறிந்திருக்கவில்லை
இப்படியும் நடக்கும்
என்றும் நினைத்திருக்கவில்லை...
அன்பின் ஆணிவேரொன்று அறுந்து போனதை
பொய்யென்றே நினைவெழுந்து நிற்கின்றது
உங்களின் இழப்பிலேதான் இழப்பு என்றால்
என்னவென்று கற்றுக் கொண்டோம்....
விடிகின்ற பொழுதுகளில் எல்லாம் நீங்கள்
வருகின்ற கனவுகளில் கூடவும் நீங்கள்
வெளிச்சத் துகள்களிலும் வெளிப்படும்
கண்ணீர்த் திவலைகளிலும் நீங்கள்
எப்படிச் சொல்வது நீங்கள் இல்லையென்று
காலங்கள் கழிகின்றன..
ஆயினும் உங்கள் நினைவுகளோடு
தான் எம் வாழ்க்கை சுழல்கின்றது...
என்றும் உந்தன் ஆத்மா சாந்திபெற
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்