1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கைலாசபிள்ளை ஜெயக்குமார்
1941 -
2020
புங்கன்குளம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அரியாலை புங்கன்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று கடந்தாலும்
ஆறவில்லை நம் துயரம்
உனது உருவம் மறைந்தாலும்
உன் அன்பு மறையாது
பண்புக்கு இலக்கணமாய்
பாதைக்கு வெளிச்சமாய்
பாசம் கொண்டு அனைவரையும்
பக்குவமாய் வழி நடத்தி
குடும்பத்திற்கு ஒளிவிளக்காய்
குலத்திற்கு கொடைவள்ளலாய்
நான் என்று வாழாமல்
நாம் என்று வாழ்ந்திருந்து
நீ வாழ்ந்த காலந்தனை
நினைத்து நீர் சொரியுதையா!
பக்கத்தில் நானிருக்க
பறந்து தான் போனதென்ன?
பதறும் பிள்ளைகளின்
பரிதாபம் என் சொல்வேன்
பரிதவிக்கும் என்னருகே
பக்கத்தில் யாருமில்லை
கைகோர்த்து நீ நடந்த
காலங்கள் இனி வருமோ!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்