யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கபிலன் கனகலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், சிரமம் பாராமல் தொலைதூரம் இருந்து வந்தவர்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் ஆத்மா சாந்தி பூஜை 07-08-2021 சனிக்கிழமை அன்று நடைபெறும் நிகழ்வினைத் தொடர்ந்து பகல் 12:00 மணியளவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அம்மா மன்றம்(Finch Tapscott)ல் நடைபெறும் மதிய போசன நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்!
💐🌹