Clicky

பிறப்பு 02 JUL 1959
இறப்பு 22 FEB 2019
அமரர் ஜோன்சன் புளோறா
வயது 59
அமரர் ஜோன்சன் புளோறா 1959 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 02 MAR 2019 Sri Lanka

புன்னகை பூத்த டோரா அக்காவே நிழல் போல் இருந்தவர் நீங்கள் நீங்காத நினைவாய் மாறினீர்கள். கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகினீர்கள். சட்டெனவே வந்த காலான் சத்தங்கள் எதுவுமின்றி சடுதியாய் உங்கள் உயிரை எடுத்துச்செல்ல எப்படித்தான் மனசு வந்திச்சோ? பத்திரமாய் உங்களைப் பாதுகாக்க முடியாமல் பாவிகளாய் பரிதவிக்கிறோம்.இதயங்கள் எல்லாம் நொறுங்க இமைகள் எல்லாம் நனைய எங்களை தவிக்கவிட்டு எங்கோ நீங்கள் பயணமானீர்கள். நீங்கள் எங்களை விட்டு தூரத்திலில்லை நினைவுகளில் இருக்கிறீர்கள். எங்கும் போகவில்லை நீங்கள் எங்கள் இதயங்களில் வாழ்கின்றீர்கள் என்றாவது ஒருநாள் எங்கோ ஓரிடத்தில் நாம் சந்தித்துக்கொள்வோம். எங்கள் அன்புக்கு என்றும் மரணமில்லை!உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம். ❤❤❤